1987 අංක 15 දරණ ප්රාදේශීය සභා පනතේ 134 හා 135 වගන්තිවල විධිවිධාන ඇතුලත් වේ.
පලාපත්වල පොදු වෙළෙඳපොළ – කඩ කාමර සංඛ්යාව 08
මඩවල උල්පත පොදු වෙළෙඳපොළ – කඩ කාමර සංඛ්යාව 07
මාතලේ ප්රාදේශීය සභාව සතු මුළු කඩ කාමර ප්රමාණය – 15 කි.
සෑම මසකම 10 වන දිනට පසුව ගෙවන කඩ කුලිය සඳහා අදාල මාසික කුලී මුදලින් 10% ත අධි ගාස්තුවක් අය කරනු ලැබේ.
මධ්යම පළාතේ පළාත් පාලන ආයතන සතු පොදු වෙළෙඳපොළ සහ වෙනත් කඩකාමර බදු දීම සම්බන්ධයෙන් මප/ප.පා.කො. චක්රලේඛ අංක 2016/3 සහ 2016.03.17 දිනැති චක්රලේඛය නිකුත් කර ඇත.
1987 අංක 15 දරණ ප්රාදේශීය සභා පනතේ 149 සිට 152 දක්වා වන වගන්තිවල විධිවිධාන ඇතුලත් වේ.
බලපත්ර වර්ග පිළිබඳ අන්තරාදායක නීති සම්බන්ධයෙන් අංක 2,363 හා 2023.12.15 දිනැති ශ්රි ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්රයේ ඵල කර ඇත.
1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் இலக்கம் 520/7 வகிக்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதி விசேட வர்த்தமானி பத்திரிக்கையிலான அறிவித்தல்.
வரிப்பணம் / வீத வரி மற்றும் ஏக்கர் வரி
1987 ஆம் ஆண்டின் பிரதேச சபைகள் சட்டத்தின் இலக்கம் 134 மற்றும் 135 ஆகிய பிரிவுகளிலுள்ள ஏற்பாடுகள் உள்ளடங்கும்.
2024 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் கீழ் வரி வருவாய் ஒன்றுதிரட்டல் நடைப்பெறும்.
வரிப்பணம் மதிப்பீட்டிற்கு எதிராக அனுப்பப்படுகின்ற ஆட்சேபனை சொத்து மதிப்பீட்டு அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும் என்பதோடு, உரிய காலவரையறைக்கு பின் அல்லது ஆட்சேபனைக்கான காரணங்களைக் குறிப்பிடாது அல்லது சட்ட விரோதமான முறையில் சமர்ப்பிக்கப்படும் ஆட்சேபனைகள் தொடர்பாக கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பினும் உரிய காலவரையறைக்கான வரியினை செலுத்த வேண்டும் என்பதோடு அவ்வாறு இல்லாதப் பட்சத்தில் ஆட்சேபனைகளை கருத்திற் கொள்ளாது தண்டப்பணம் அறவிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சொத்து மதிப்பீட்டு அறிவித்தலுக்கு உரித்தான வருடத்திற்குமான வரியனை சனவரி 31 ஆந் திகதிக்கு முன் செலுத்தும் பட்சத்தில் 10% கழிவினையும் காலாண்டுக்கான வரித் தொகையினை அக் காலாண்டின் முதல் மாதத்தில் செலுத்தும் பட்சத்தில் 5% கழிவினையும் பெறுவதற்கு உரித்துடையவராவீர்கள். (சனவரி 31 ஆந் திகதி அரச விடுமுறை தினம் எனில் வரி செலுத்தப்படும் மறுநாள் செல்லுபடியாகும்.)
குறித்த திகதிக்கு பின்பு செலுத்தப்படுகின்ற வரிகள் தொடர்பாக பாழடைந்த காணி மற்றும் குடியிருப்புகளுக்காக 15% மும் ஏனைய சொத்துக்களுக்காக 20% மும் வாரன்ட் கட்டணமாக மேலதிகமாக அறவிடப்படும்.
செயலாளர், மாத்தளை பிரதேச சபை எனும் முகவரிக்கு
காசோலையினை அனுப்புதல் வேண்டும்.
வரிப்பணத்தினை நிகழ்நிலை ஊடாக செலுத்துவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த ஏனைய வார நாட்களில் மு.ப.08.30 மணி தொடக்கம் பி.ப.03.00 மணி வரை பிரதேச சபை காரியாலயத்தில் செலுத்த முடியும்.
சொத்து உரிமையானது மாற்றப்பட்டிருப்பின் 04 கிழமைக்குள் பிரதேச சபையில் பெற்றுக் கொண்ட ஆதன உரிமச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பித்து புதிய உரிமத்தினை ஆவணப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் வேண்டும்.
வாடகைக்கான கட்டணம்
பலாபத்வல பொது சந்தை – கடை அறைகளின் எண்ணிக்கை 08
மடவல உல்பத்த பொது சந்தை – கடை அறைகளின் எண்ணிக்கை 07
மாத்தளை பிரதேச சபைக்கு உரித்தான மொத்த கடைகளின் எண்ணிக்கை – 15 ஆகும்
ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதிக்கும் பின்னர் கடை வாடகை, செலுத்தப்படும் பட்சத்தில், உரிய மாத வாடகைத் தொகையில் மேலதிகமாக 10% கட்டணம் அறவிடப்படும்.
மத்திய மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உரித்தான பொது சந்தைகள் மற்றும் ஏனைய கடை அறைகளினை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக மத்திய/உ.நி.ஆணையாளரின் 2016.03.17 ஆந் திகதிய மற்றும் இலக்கம் 2016/3 சுற்றறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவுப் பத்திர கட்டணம்
1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கத்தினை வகிக்கும் பிரதேச சபைகள் சட்டத்தின் 149 தொடக்கம் 152 வரையிலான பிரிவுகளின் ஏற்பாடுகளில் உள்ளடங்கப்பட்டுள்ளன.
உத்தரவு பத்திரங்களின் வகைகள் பற்றி பயங்கரவாத சட்டம் தொடர்பாக இலக்கம் 2,363 மற்றும் 2023.12.15 ஆந் திகதிய இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதி விசேட வர்த்தமானி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
சேவைகள் தொடர்பான கட்டணங்கள்
சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ்கள் கட்டணங்கள், வழங்குனர்களை பதிவுச் செய்வதற்கான கட்டணங்கள், சுற்றாடல் உத்தரவுப் பத்திரத்தினை பரிசீலனைச் செய்வதற்கான கட்டணங்கள், தெருவிளக்குகளை ஒளியேற்றல், கழிவுகளுக்கான கட்டணங்கள், மயானத்திற்கான கட்டணங்கள், தகன அறைக்கான கட்டணங்கள், குடியிருக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணங்கள், நீர் தாங்கியினால் ஈட்டப்படும் வருமானம், நென பியச மற்றும் நூலக அங்கத்துவ கட்டணங்கள் ஆகிய அறவிடப்படும் கட்டணங்கள் வருமான வகைப்பாட்டிற்குள் உள்ளடங்கப்படும்.
வாரன்ட் கட்டணம் மற்றும் அபராத கட்டணம்
வரிப்பணம் மற்றும் ஏக்கர் வரிக்கான அதிகூடிய கட்டணங்கள், நீதிமன்றத்திற்கான அபராத கட்டணங்கள், சுற்றாடல் தொடர்பான அபராத கட்டணங்கள், தொழிற்சாலைகளுக்கான பிந்திய கட்டணங்கள், நீர் இணைப்பினை மீண்டும் இணைப்பதற்கான கட்டணங்கள் மற்றும் அபராத கட்டணங்கள், குத்தகை வாடகைக்கான பிந்திய கட்டணங்கள் மற்றும் நூலகத்திற்கான பிந்திய கட்டணங்கள் ஆகிய அறவிடப்படும் கட்டணங்கள் வருமான வகைப்பாட்டிற்குள் உள்ளடங்கப்படும்.
வேறு வருமானங்கள்
நிலையான வைப்புக்களுக்கான வட்டியிலிருந்து பெறப்படும் வருமானங்கள், பணியாளர்களுக்காக வழங்கப்படும் சேவைக் கடன்களுக்கான வட்டியிலிருந்து பெறப்படும் வருமானங்கள், மாதிரிப் படிவங்கள் மற்றும் படிவங்களின் விற்பனை, முத்திரை கட்டணங்கள், சேதனப் பசளைகள் மற்றும் தொட்டிகளை விற்பனைச் செய்வதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானங்கள், நீர் கட்டண வருமானங்கள், பழைய பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை விற்பனைச் செய்வதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானங்கள் ஆகியன வருமான வகைப்பாட்டிற்குள் உள்ளடங்கப்படும்.
வருமான உதவி
பல்வேறு அமைச்சிகளின் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற உதவிகள் இவ் வருமான வகைப்பாட்டிற்குள் உள்ளடங்கப்படும்.
வாகன சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது விண்ணப்பதாரரால் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பொறுப்பேற்றல்.
உரிய சேவையினை சரியான முறையில் வழங்குவதற்கான இயலுமை, தூரம் மற்றும் செலவிடப்படும் காலம் ஆகிய தகவல்களை சாரதியிடம் பெற்றுக் கொள்ளல்.
வாகனத்தை வழங்குவதற்கான பரிந்துரைகளை தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் இருந்து பெற்றுக் கொள்ளல்.
வாகனத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை செயலாளர்/ தலைவரிடமிருந்து பெற்றுக் கொள்ளல்.
வாகன விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரினால் உரிய சேவையினை வழங்கியதன் பின் அறவிடப்பட்ட கட்டணம், பற்றுச்சீட்டு இலக்கம் மற்றும் திகதி ஆகிய தகவல்களை உரிய ஆவணத்தில் உள்ளீடுச் செய்யப்படல்.