இலங்கையின் மத்திய பிரதேசமாகக் கருதப்படும் மாத்தளை மாவட்டமானது 19939 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டமைந்ததுடன், கிழக்கு அகலாங்கு 80.28 இல் இருந்து 80.59 வரையும் வடக்கு நெட்டாங்கு 7.24 இல் இருந்து 08.01” வரையும் பரந்திருக்கின்றன.
மாத்தளை மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கில் அநுராதபுரத்தையும் கிழக்கில் பொலன்னறுவை, பதுளை மற்றும் அம்பாறையையும் தெற்கில் கண்டியையும் மேற்கில் குருநாகலையையும் கொண்டமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1000 அடியிற்கும் குறைவான நிலப் பரப்பினையும் 2000 அடியிற்கு மேற்பட்ட நிலப் பரப்பினையும் கொண்டமைந்துள்ள பூகோளவியலின் அடிப்படையில் நக்கல்ஸ், ஓவிலிகந்த, எத்திபொல, மகுலுஸ்ஸ, தெட்டிகல, தம்புலுகல மற்றும் அரங்கல ஆகிய மலைத் தொடர்களினால் வியாபித்துக் காணப்படுகின்றமை மற்றும் அவ் மலைத்தொடர்களில் இருந்து பாய்ந்தோடும் அருவிகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளின் கண்கவர் காட்சி, அழகிய சூழல் மற்றும் 230C தொடக்கம் 310C வரையிலான மிதமான வெப்பநிலையுடன் கூடிய காலநிலை ஆகியனவற்றைக் கொடையாகப் பெற்ற மாத்தளை நகரத்தினை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகைத் தரும் ஓர் இடமாக திகழ்கின்றது. அதேப்போல் உப்புத் தவிர்ந்த பல்வேறுப்பட்ட கனிய வளங்கள், மனிதனின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சகல வளங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக பங்களிப்பினை நல்கும் மாவட்டமாக மாத்தளை மாவட்டத்தினைக் குறிப்பிடலாம்.
மாத்தளை மாவட்டத்தின் நிர்வாகத்தினை இலகுப்படுத்தும் முகமாக மாத்தளை, தம்புள்ளை, இரத்தோட்டை மற்றும் லக்கல ஆகிய நான்கு தேர்தல் பிரிவுளைக் கொண்டமைந்துள்ளதுடன், மாநகர சபைகள் 02 மற்றும் பிரதேச சபைகள் 11 உடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பினைக் கொண்டமைந்துள்ளது. மாத்தளை பிரதேச செயலகப் பிரிவினுள் மாத்தளை மாநகர சபை மற்றும் மாத்தளை பிரதேச சபை ஆகியன ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளன.
இன்று மாத்தளை என்றழைக்கப்படும் பிரதேசம் அன்று “மகதலய” என அழைக்கப்பட்டதாக பாகுப்பாய்வுச் செய்யும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் “மா துல ஜனபதய” எனும் பதம் மாத்தளையாக பெயர் உருமாற்றம் பெற்றதாக நிபுணர்களினின் கருத்தாக அமைகின்றது. அதிகளவான அருவிகள் பாந்தோடி வரும் பிரதேமாக இருப்பதால் “மாத்திகா” மற்றும் “தியபஹர” என்ற பெயர்கள் உருவாக்கப்பட்டதாவும் பல கருத்துக்கள் உள்ளன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு மாத்தளை நகரானது பல்வேறுப்பட்ட கால அத்தியாயங்களில் இலங்கைத் தீவில் பலதரப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கான அடிப்படைக் காரணியாக அமைந்த ஓர் மாவட்டமாகும். படைப்புக்கள் மற்றும் நாட்டுப் புற கதைகளின் மூலம் இராவணன், பண்டுகாபயன், விஜயன், குவேனி மற்றும் தேவநம்பியதீசன் ஆகிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் போது பொருளாதார, சமூக, சமய மற்றும் கலாச்சாரங்கள் போன்றவற்றில் முக்கியமான மாவட்டமாக திகழ்ந்தமை வெளிக் கொனரப்பட்டுள்ளன. இவ் வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக் கொண்டு தற்போது எழுதப்பட்டு கட்டுரையாக்கப்பட்ட படைப்புக்கள் பெருமளவில் இருப்பதோடு, மலையகத்தின் மாத்தளை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு அவ் ஆவணங்களைப் பார்வையிடும் போது இவ் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக பரவியிருக்கும் புராணக் கதைகள் மற்றும் இக்கால கட்டத்தில் உள்ள சகல தகவல்கள் தொடர்பாக சிறந்த அறிவினைப் பெற்றுக் கொள்ளக் பயன்படக் கூடியதாக இருக்கும்.
தேவநம்பியதீசன் மன்னன் ஆட்சி காலத்தின் போது, உயர்தர மரவேலை கைவினைஞர்கள் குடியேறியதாகவும் தற்போது அத் தலைமுறையினர் மாத்தளை மாவட்டம் முழுவதும் வியாபித்து, கிராமங்களில் தமது சந்ததியினர் மற்றும் தொழிலினை எதிர்காலச் சந்ததியினருக்கு கொடையாக வழங்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வரலாற்று புகழ்மிக்க மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அலு விகாரையானது, தேவநம்பிய தீசன் மன்னனின் ஆட்சிக் காலம், திருப்பீடகம் நூல் வடிவில் உருவாக்கப்பட்ட வலகம்பா மன்னனின் ஆட்சிக் காலம், கீர்த்தி ஸ்ரீ நிஷ்சங்க மன்னனின் ஆட்சிக்காலம் மற்றும் கீர்த்திசிங்க மன்னனின் ஆட்சிக் காலங்களை தாண்டியும் இன்றும் அவ் விகாரையின் புகழ் ஓங்குகின்றது. அதேப் போன்று கி.பி 7 ஆம் நூற்றாண்டில் மாத்தளை நகரத்தின் வரலாற்று புகழ் பெற்ற தம்புலு விகாரையின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சியானது இடம் பெற்றதாக கருதப்படுகின்றது.
காசியப்ப மன்னனினால் நிர்மாணிக்கப்பட்ட சீகிரியா குன்று மற்றும் இலங்கையின் இறுதி ரகதுன்வகன்சேயாக கருதப்படும் மலியதேவ ரகதுன்வகன்சே அவர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் மெணிக் லென எனும் பிரதேசம் அமைந்துள்ள இடம் மற்றும் வரலாற்று பழைமை வாய்ந்த யுகங்களை உள்ளடக்கிய பௌத்த சமயம் மற்றும் அது தொடர்பான சமய வணக்க ஸ்தலங்கள் ஆகியன மாத்தளை மாவட்டம் பூராகவும் வியாபித்து காணப்படுகின்றன.
மேலும் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய வணக்க ஸ்தலங்கள், வஹக்கோட்டை கத்தோலிக்க பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்களின் கௌரவத்திற்கு உரித்தான முஸ்லிம் மத வணக்க ஸ்தலங்கள் ஆகியன அமைந்திருப்பதனால் மாத்தளை நகரமானது சமய மற்றும் கலாச்சாரங்களினால் வளம் பெற்ற ஓர் மாவட்டமாக விளங்குகின்றது.
1987 ஆம் ஆண்டு ஊவ வெல்லஸ்ச மாபெரும் கிளிர்ச்சிக்கு பங்கேற்ற மாத்தளையின் வீரர்களுள் எல்லேப்பொல மக நிலமே, அலுவிகார நிலமே மற்றும் கொட்டுவே கெதர குடா திவ நிலமே ஆகியோர் மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழ்ந்த வீரர்கள் ஆவார்கள்.
1948 ஆம் ஆண்டு மாத்தளை கிளர்ச்சிக்கு போற்றப்படாத வீரராக நல்லெவெல கந்தேகெதர அவர்களும் மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழ்ந்தவராவார்.
கடந்த காலங்களில் மாத்தளை மாவட்டத்தில் இலக்கியம் மற்றும் கலை துறைகளில் சிறந்த முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக உள்ளது. அலுவிகாரே சரணங்கர போன்ற முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் சோமரத்ன ஹரஸ்கம போன்ற அரச விருது பெற்ற எழுத்தாளர்கள் உட்பட பெருமளவிலான பெண் எழுத்தாளர்கள் மாத்தளை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்துவதுடன் இலக்கிய துறை வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
පලාපත්වල නගරයේ ස්ථාපනය කරන ලද ගම්සභා කාර්යාල ගොඩනැගිල්ල
පළමු ගම්සභා කාර්යාලය
පළමු ගම්සභාපති භාවිතා කළ ආසනය
පළමු ගම්සභාපති භාවිතා කළ මේසය
ගම්සභාවේ පළමු සභාපති ගරු ක්ලෝඩ් අලුවිහාරේ මැතිතුමා
ගම් සභාවේ දෙවැනි සභාපති මිලීනා කුමාරිහාමි මැතිතුමිය
மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட வரலாற்று மற்றும் தொல்பொருள் பெறுமதியுடைய இடமாக அலுவிகாரை ரஜ மகா விகாரை மற்றும் புதிய புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த இடத்தினை அறிமுகப்படுத்தலாம். சாசன வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான திருப்பீடகத்தினை நூல் வடிவில் எழுதப்பட்ட இடமாக கருதப்படும் அலுவிகாரை என்றழைக்கப்படும் ஆலோக விகாரையினை பிரதிநிதித்துவப்படுத்தி 1973 ஆம் ஆண்டு சங்காயனா ஊர்வலம் (பெரகெர) நடைபெற்றது
கவட்டையாமுன விகாரை – இவ் விகாரையானது கஜபா அரசனின் யூதர்கள் நூறு பேரினைக் கொண்டு அமைக்கப்பட்டதாக புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன. வாழும் காலத்தில் செய்யும் பிழைகளுக்கு நரகத்தில் கிடைக்கும் தண்டனைகளை சித்தரிக்கும் சித்திரங்கள் மற்றும் சிலைகள் இவ் விகாரையில் அமைக்கப்பட்டுள்ளன.
எம்பில்ல விகாரை, ஹுலங்கமுக, மாத்தளை – குகையினை ஆதாரமாகக் கொண்டமைக்கப்பட்ட இவ் விகாரை அனுராதபுர காலத்திற்கு உரித்தான கடாரங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளன. (வுருஷக்க மற்றும் குஞ்சரய) பசுக்கள் மற்றும் யானைகளின் உருவங்களுடனான சுவரோவியங்கள் இங்கு உள்ளன. அதேப்போல் குகையின் கீழ் உள்ள விகாரையில் அரச மரமும் அமைந்துள்ளது
படிவிட்ட அம்பலம, கூம்பியன்கொட, மாத்தளை – அழகிய வயல்களின் நடுவே அமைந்துள்ள மர வேலைப்பாடுகளுடன் கூடிய புராதன அம்பலமாகும் (மடம்). மாத்தளை நகரத்திலிருந்து 594 கூம்பியன்கொட வீதியில் மூன்று கிலோ மீட்டர் வரை செல்லுகையில் படிவிட்ட நடுவே இவ் அம்பலம் அமைந்துள்ளது
மடவல உல்பத்த பஞ்ச பிஹில்ல – வனப் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள இவ் நீரூற்று பல நீரூற்றுக்களில் இருந்து தண்ணீரை பெறுகின்றது. “அத்தி உடையன்” என்று அழைக்கப்படும் ஔடத தாவரம் இவ் நீரூற்று அருகில் காணக்கூடியதாக உள்ளது. பிரித்தானிய ஆட்சி காலத்தின் போது ஜெர்மன்வத்த (ஆடிஸ்மலே) எனும் பிரதேசத்துக்கு நீர் வழங்குவதற்காக இப் பிரதேசம் பயன்படுத்தப்பட்டுள்ளது