19 ஆம் நூற்றாண்டில் ஏழாம் தசாப்தத்தில் “மாத்தளை பல்லேசியபத்துவ” என்னும் கிராம சபையானது அலுவிகாரை நகரத்தில் சிறிய ஓரிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இவ் கிராம சபையின் தலைவராக திரு.க்லோர்ட் ஸ்டெண்லி அலுவிகாரே அவர்கள் நியமிக்கப்பட்டார். அத்துடன் கிராம சபைக்கான உறுப்பினர் குழுவானது நியமிக்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்ட கிராம சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்போடு பலாபத்வல நகரத்தில் கிராம சபை கட்டடமானது நிர்மாணிக்கப்பட்டதோடு, அங்கு “மாத்தளை பல்லேசியபத்துவ” எனும் கிராம சபையானது நிறுவப்பட்டுள்ளது. மாத்தளை அலுவிகாரையில் இருந்து கெட்டவல வரையிலான நிலப்பரப்பின் அரைவாசியானது பல்லேசியபத்துவ கிராம சபைக்கு உரித்தானதாகும்.
1950 ஆம் ஆண்டளவில் திருமதி.மிலானா குமாரிஹாமி அவர்கள் கிராம சபையின் தலைவராக நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் கிராம சபையின் தலைவர் பதவியை வகித்த ஒரே ஒரு பெண்மணி இவராவார். திருமதி.மிலானா குமாரிஹாமி அவர்களின் பதவி காலத்தின் பின்பு திரு.குலதுங்க அவர்கள் மற்றும் திரு.ஏ.எச்.எம்.கருணாரத்ன ஆகியோர் கிராம சபையின் தலைவர்களாக பதவி வகித்து உள்ளனர்.
1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் 1988 ஆம் வருடத்தில் நடாத்தப்பட்ட முதலாவது உள்ளூராட்சி தேர்தலில் மாத்தளை பிரதேச சபையின் ஆரம்ப தலைவராக தற்போதைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த அலுவிகாரே அவர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையில் விருப்பு வாக்கின் அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலில் பிரதேச சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதுடன் 18 உறுப்பினர்களைக் கொண்ட சபையானது உருவாக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி தேர்தலில் மாத்தளை பிரதேச சபையின் தலைவராக திரு.எட்மண்ட் இனிமங்கட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997 ஆம் ஆண்டு திரு.நிமல் ஜயவர்தன அவர்களும் 2002 ஆம் ஆண்டில் திரு.நிஹால் விஜயநாயக்க அவர்களும் 2006 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் திரு.நிமல் ஜயவர்தன அவர்களும் 2011 ஆம் ஆண்டில் யூ.எச்.எம்.கபில பண்டார ஹேன்தெனிய அவர்களும் மாத்தளை பிரதேச சபையின் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
2018 ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தல் முறைமையின் பிரகாரம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் தலைவராக திரு.யூ.எச்.எம்.கபில பண்டார ஹேன்தெனிய அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மாத்தளை பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
தற்போது 61.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான விஸ்தீரணம் மற்றும் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய மாத்தளை பிரதேச சபையானது, நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் மக்களுக்கான தனித்துவமான பணியை நிறைவேற்றி முன்னோக்கி நகருகின்றது.
பலபட்வல நகரில் நிறுவப்பட்ட கிராம சபை அலுவலக கட்டிடம்
முதல் கிராம சபை அலுவலகம்
முதல் கிராமத் தலைவர் பயன்படுத்திய இருக்கை
முதல் கிராமத் தலைவர் பயன்படுத்திய மேசை
கிளாட் அலுவிஹாரே, கிராம சபையின் முதல் தலைவர் திரு
மிலீனா குமாரிஹாமி, கிராம சபையின் இரண்டாவது தலைவர் திருமதி
கல்வி, பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் அபிவிருத்தி அடைந்ததோர் ஆரோக்கியமான மக்களினை உருவாக்குதல்
அபிமானமிக்க நாங்கள் அற்புதமான நாட்டினைக் கட்டியெழுப்புவோம்
வரலாற்று புகழ் மிக்க மாத்தளை நகரத்தின் மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சுகாதார, கல்வி மற்றும் சுற்றுச் சூழலினை அபிவிருத்திச் செய்வதன் ஊடாக பிரதேச வாழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கு பங்களிப்பினை நல்குதல்.
வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை மாவட்டமானது 61.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான விஸ்தீரணத்தைக் கொண்டமைந்துள்ளதுடன் அண்ணளவாக 66,000 மக்கள் அடர்த்தி மற்றும் 42 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளை உள்ளடக்கி, 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தினால் இவ் மாத்தளை பிரதேச சபையானது ஸ்தாபிக்கப்பட்டது. மிக துரிதமாக சனத்தொகை வளர்ச்சியடைவதுப் போல் அபிவிருத்தி அடைந்து வரும் உள்ளூராட்சி நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசமாக அறிமுகப்படுத்த கூடியதாக உள்ளது.
பண்டுகாபய மன்னன் அரசாட்சி காலம் தொட்டு பிரதேச வாரியான ஆட்சியின் உபாயங்கள் மற்றும் கிராம சபை, நகர சபை ஆட்சிகளை தாண்டி தற்போது மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை என முறையாக சிறந்த மாற்றங்களுக்கு உட்பட்டு அரச மற்றும் அரசியல் ஆகிய பிரிவுகள் இரண்டையும் கலந்ததொரு அரச நிறுவனமாக பிரதேச சபையினை கருதலாம். ஓர் தாயின் கருத்தரித்தல் தொடக்கம் மரண படுக்கை வரையிலான மனிதனின் பல்வேறுப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கீழ் மட்ட மக்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் அரச நிறுவனமாக உள்ளூராட்சி நிறுவனம் விளங்குகின்றது. பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்டு இயங்கும் உள்ளூராட்சி நிறுவனமானது பொறுப்புக்கள் நிறைந்த பாரிய கருமங்களை நிறைவேற்றுவதோடு, நிர்வாக எல்லைக்குட்பட்டு வாழும் பொதுமக்களின் சுகாதாரம், பொது பயன்பாட்டு சேவைகள், வீதிகள்/ தெருக்கள் உள்ளடங்கிய உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல், ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வாகத்தினை சிறப்பாகவும் வினைத்திறனாகவும் நடாத்த பொதுமக்களுக்கான பொது சேவைகளை நிறைவேற்றுவதற்காக உள்ளூராட்சி நிறுவனத்திற்கு கட்டளைச் சட்டங்கள் மூலம் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய சேவைகளை சரியான முறையில் நடைமுறைபடுத்துவதற்காக வருடாந்த வருவாய்களை திரட்டுதல், துணை விதிகளை உருவாக்குதல், அரசியலமைப்புக்கு உட்பட்ட நிறுவனம் என்ற ரீதியில் சட்டத்திட்டங்களை அமுல்படுத்துதல், கட்டளைச் சட்டங்கள் மற்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சரியான முறையில் செயல்படுத்துவதன் மூலம் திருப்திகரமான மக்களை உருவாக்குவதற்கு மாத்தளை பிரதேச சபை ஆகிய நாம் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். இதனூடாக இதுவரையில் மாத்தளை மாவட்டத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கிடையில் தொடர்ச்சியாக 8 முதல் 10 வருட காலமாக செயவாற்றுகையில் முதலாம் இடத்தினையும் மத்திய மாகாணத்தின் சிறந்த உள்ளூராட்சி நிறுவனமாக மாத்தளை பிரதேச சபை தனக்கென ஓர் இடத்தினைப் பெற்றுள்ளது.
மாத்தளை பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு அலுவலகத்திற்கு சமூகமளிப்பதற்கு பதிலாக e – தொழில்நுட்பத்தின் ஊடாக அவசியமான சகல சேவைகளையும் தமது வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்வதற்கு பிரதேச சபையானது, வேலைத்திட்டம் ஒன்றினை தற்போது ஆரம்பித்துள்ளது. இதனூடாக பொதுமக்களின் மனிதவலு, பணம் மற்றும் நேரம் ஆகியன மீதப்படுத்தபடுவதுடன் துரிதமாக செய்வேனே சேவையினை வழங்குவதற்கு இலகுவானதாக இருக்கும். பொது மக்களுக்கு மிகவும் நேயமான அரச நிறுவனம் என்ற வகையில் நாம் நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அனைத்து வகையான பிரிவுகளிலும் நீண்ட நிலையான அபிவிருத்தியினூடாக சிறந்து ஸ்தீரத்தன்மையினை அடைவதற்கு மாத்தளை பிரதேச சபையின் பிரதிநிதித்துவத்தை வழங்குகின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாக தலைவர் என்று ரீதியில் என்னுடன் எனது முழு பதவியினரும் எல்லா விதத்திலும் அர்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்பதினை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக பொதுமக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய சகல கருமங்களையும் சரியான முறையில் மற்றும் வினைத்திறனாக நிறைவேற்றி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் நாட்டின் சிறந்த உள்ளூராட்சி நிறுவனமாக பரிமானமடைவதே எமது நோக்கமாகும்.
மாத்தளை பிரதேச சபையினால் வழங்கப்படும் யாதேனும் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக நாடிவரும் பொது மக்களின் சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடனான சூழலை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக என்னுடன் எமது பணிக்குழுவினரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவ் சேவையானது திறம் பட நடைப்பெற சேவை நாடுனர் ஆகிய தங்களின் ஆலோசனைகள், முன்மொழிவுகள் மற்றும் முறைப்பாடுகள் ஆகியவற்றினை சமர்ப்பித்தும் எம்முடன் பயணிக்க தங்களை கௌரவத்துடன் அழைக்கின்றேன்.