සඳුදා - සිකුරාදා8.30AM - 4.15PM
Officesමාතලේ ප්‍රාදේශීය සභාව, පලාපත්වල
Visit our social pages

அபிவிருத்தி பிரிவு

  • කාර්මික සේවා කමිටුව පැවැත්වීම
    • කමිටුවේ සංයුතිය
    • පරිපාටිය
    • කාලසටහන
කාර්මික සේවා කමිටුව දිනය 23 22 22 23 24 25 23 23 24 22 22 20
දවස අඟහරුවාදා බ්‍රහස්පතින්දා සිකුරාදා අඟහරුවාදා සිකුරාදා අඟහරුවාදා අඟහරුවාදා සිකුරාදා අඟහරුවාදා අඟහරුවාදා සිකුරාදා සිකුරාදා
වේලාව පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00 පෙ.ව.02.00

 

  • සංවර්ධන යෝජනා ක්‍රියාත්මක කිරීම සහ අධීක්ෂණය කිරීම
    • සංවර්ධන යෝජනා ඉදිරිපත් කිරීම
      • ප්‍රාදේශීය මාර්ග සංවර්ධනය සම්බන්ධ යෝජනා
      • ප්‍රාදේශීය කාණු සංවර්ධනය සම්බන්ධ යෝජනා
      • ප්‍රාදේශීය බෝක්කු සංවර්ධනය සම්බන්ධ යෝජනා
      • ප්‍රාදේශීය පාලම් සංවර්ධනය සම්බන්ධ යෝජනා
    • ක්‍රීඩා පිටි නඩත්තුව
    • පැමිණිලි අංශය
      • අනතුරුදායක ගස් සම්බන්ධව පැමිණිලි
      • අනවසර ඉදිකිරීම් සම්බන්ධව පැමිණිලි
      • අනෙකුත් මහජන පිඩා සම්බන්ධ පැමිණිලි
        • ඉවුරු කැපීම සම්බන්ධව
        • කාණු අවහිර කිරීම
        • කුණු කසල, අප ජලය මාර්ගයට හෝ වෙනත් ඉඩමකට දැමීම හා හැරවීම
      • විථි පහන් නඩත්තුව සම්බන්ධ සේවාවන්
        • වීථි පහන් ක්‍රියා විරහිත වීම සම්බන්ධව පැමිණිලි
        • නව වීථි පහන් සවි කරගැනීම සම්බන්ධව යෝජනා
      • සැලසුම් අංශය
        • ගොඩනැගිලි අයදුම්පත් අනුමත කිරීම
        • ගොඩනැගිලි අයදුම්පත් සංශෝධනය කිරීම
        • ගොඩනැගිලි බලපත්‍ර කාලය දීර්ඝ කිරිම
        • අනුකූලතා සහතිකය නිකුත් කිරීම
      • උසාවි කටයුතු

அபிவிருத்தி பிரிவு

தொழில்நுட்ப சேவைகள் குழுவினை நடாத்துதல் - நேர அட்டவணை
Scrollable Table Example
தொழி-ல்நுட்ப சேவை-கள் குழு දිනය 23 24 24 24 22 24 22 22 23 23 21 23
நாள் பிரஹஸ்பதிந்தா சந்துதா சந்துதா பிரஹஸ்பதிந்தா பிரஹஸ்பதிந்தா அங்குரவாதா அங்குரவாதா சிகுராதா அங்குரவாதா பிரஹஸ்பதிந்தா சிகுராதா அங்குரவாதா
நேரம் பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00 பி.ப.02.00
அபிவிருத்தி கருத்திட்டங்கள்

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பிரதேசத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து முன்னுரிமையின் அடிப்படையில் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். இதற்காக பிரதேசத்திற்கு உரித்தான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களின் தேவைப்பாடானது மிக முக்கியமானதாகும். அபிவிருத்தி திட்டம் ஒன்றின் மூலம் பிரதேசத்திலுள்ள சகல பௌதீக, பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் காரணிகளை பகுப்பாய்வு செய்வதன் ஊடாக தீர்மானங்களுக்கு வர முடிவதோடு அதற்கான யதார்த்தமான தீர்வுகளை வழங்கக் கூடியதாக உள்ளது.

அதன்படி, பிரதேச சபைகள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (அ) மற்றும் (ஆ) பந்திகளின் பிரகாரம் புதிய தெருக்களை நிர்மானித்தல் மற்றும்  தற்போதுள்ள தெருக்களை மேம்படுத்துவதற்கு பிரதேச சபைகளுக்குள்ள அதிகாரங்கள்  தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. (அபிவிருத்தி பிரிவில் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் இணைப்பு 1 இல் உள்ளது.)

ஒவ்வொரு வருடமும் வீதிகள், பாலங்கள், காள்வாய்கள் (போக்குகள்), மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றினை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்தல் மற்றும் பிரதேச சபைக்கு உரித்தான சொத்துக்களை அபிவிருத்திச் செய்தல் தொடர்பாக பிரதேச சபைகள் சட்டத்தின் 16, 17, 18, 25, 27 மற்றும் 28 ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரதேச சபையினால் நல்லிணக்கப்பாட்டுடனான நீண்டு நிலைத்திருக்கும் மூன்று பரிமாணங்களான சுற்றாடல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றினை அடையும் பொருட்டு அணுகும் முறைமையினை நிலையான அபிவிருத்தி என்றழைக்கப்படும்.

அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைச் செய்தல்
  • பிரதேச வாரியான வீதிகளை அபிவிருத்திச் செய்வது தொடர்பான திட்டங்கள்
  • பிரதேச வாரியான காண்களை அபிவிருத்திச் செய்வது தொடர்பான திட்டங்கள்
  • பிரதேச வாரியான காள்வாய்களை (போக்குகள்) அபிவிருத்திச் செய்வது தொடர்பான திட்டங்கள்
  • பிரதேச வாரியான பாலங்களை அபிவிருத்திச் செய்வது தொடர்பான திட்டங்கள்
  • விளையாட்டு மைதானத்தை பராமரித்தல்
முறைப்பாட்டுப் பிரிவு

பொதுமக்களின் முறைப்பாடுகள்

திண்மக் கழிவுகள் தொடர்பான முறைப்பாடுகள்

திண்மக் கழிவுகளை வீதி/ தெருக்களில் அகற்றினால் 1987 ஆம் ஆண்டு  15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 65 ஆம் (உ) பிரிவின் பிரகாரம் குற்றமாகும்.

  ஒலி மாசடைதல்

1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் தொழிற்சாலையிலிருந்து சூழலுக்கு வெளிப்படுத்தப்படும் ஒலியானது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் தன்மையில் இருக்கும் பட்சத்தில், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தில் 106 (1) ஆம் பிரிவின் பிரகாரம் குற்றமாவதோடு, 106 (2) ஆம் பிரிவின் பிரகாரம் நீதிமன்ற முன்னிலையில் அபராதத் தொகை அறவிடப்படுவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

உலாவித்திரியும் கட்டாக்காலி நாய்கள் மற்றும் ஏனைய மிருங்களினால் ஏற்படும் தொல்லைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள்

 

பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் உலாவித்திரியும்  கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்கம் வகிக்கும் பிரதேச சபைகள் சட்டத்தின் 66 ஆவது பிரிவின் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

மழை நீரானது இயற்கையாக பாய்ந்தோடுவதை தடைச் செய்தல் தொடர்பாக 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்கம் வகிக்கும் பிரதேச சபைகள் சட்டத்தின் 81 ஆவது பிரிவின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • நீர் ஆதாரங்களின் கரையோரங்களை (வங்கியினை) வெட்டுதல் தொடர்பாக
  • வடிகாலில் (காண்) அடைப்பினை ஏற்படுத்தல்
  • குப்பைகூளங்களை கழிவுநீர் செல்லும் வழியில் இடல் அல்லது அக் கழிவுநீரினை வேறு காணியிற்கு திருப்புதல்.

ஆபத்தான மரங்கள் தொடர்பான முறைப்பாடுகள்

ஆபத்தான மரங்கள் தொடர்பாக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கத்தினை வகிக்கும் பிரதேச சபைகள் சட்டத்தின் 107 (1 மற்றும் 2) ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கைகள்  மேற்கொள்ளல் மற்றும் அதனூடாக பிரதேச சபையினால் மரங்கள் அல்லது கிளைகளை வெட்டுவதற்காக செலவிடப்படும் தொகையினை உரிய தரப்பினரிடமிருந்து அறவிடல்.

அத்துமீறிய கட்டடங்கள் தொடர்ன முறைப்பாடுகள்

மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் வீடு அல்லது கட்டடத்தினை நிர்மானிக்கும் போது வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் அவ் வீடு அல்லது கட்டடமானது பிரதேச சபையின் ஊடாக அங்கீகாரத்தினைப் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு அல்லாத சந்தர்ப்பங்களின் போது, பிரதேச சபையினால் அவ் அத்துமீறிய கட்டடம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.

மாத்தளை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் வீடு அல்லது கட்டடத்தினை நிர்மானிக்கும் போது வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் வீடு அல்லது கட்டடம் தொடர்பாக பிரதேச சபையினால் அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்காக உரிய கட்டணத்தினைச் செலுத்தி கட்டட அனுமதி விண்ணப்பப் படிவத்தினை பிரதேச சபையில் பெற்றுக் கொள்வதோடு, அவ் விண்ணப்பப் படிவத்தினை நிவர்த்தியாக பூரணப்படுத்தி கீழ் குறிப்பிப்பட்ட ஆவணங்களுடன் பிரதேச சபைக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

  1. அங்கீகரிக்கப்பட்ட வரைப்படங்கள் மற்றும் அதன் நிழற் பிரதிகள்
  2. மேற் குறிப்பிடப்பட்ட வரைப்படத்திற்கு உரிய கட்டடமானது நிர்மானிக்க எதிர்பார்க்கும் காணித் துண்டின் சான்றுப் பத்திரங்கள்
  • கட்டடத் திட்டத்தின் நிழற் பிரதிகள் 03
  1. தேவையான சந்தர்ப்பங்களின் போது அரச அல்லது அரசியலமைப்புக்கு உட்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்ற ஆவணங்களின் பிரதிகள்
  • வயற் காணி எனில் கமநல சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரம்
  • கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகள்
  • இஹல மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரைகள்
  • வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பரிந்துரைகள்
  • மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரைகள்
  • வீதி அபிவிருத்தி அதிகாரசபை / மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரைகள்
  • புவிச் சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பரிந்துரைகள்
  • தொல்பொருளியல் திணைக்களத்தின் பரிந்துரைகள்
  • கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பரிந்துரைகள்
  • தாழ்நில அபிவிருத்தி சபையின் பரிந்துரைகள்

அத்துமீறிய கட்டடங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகள்

சட்டரீதியான ஏற்பாடுகள்

  1. வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி கட்டளை சட்டம் (268 ஆம் அதிகாரம்)
  2. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் இலக்கம் 47, 48 மற்றும் 49 ஆம் பிரிவுகள்
நடைமுறைகள்
  1. அத்துமீறிய கட்டடங்கள் தொடர்பாக அறிக்கை இடல். (தொலைபேசியின் ஊடாக, கடிதங்களின் மூலம், மனுக்களின் ஊடாக மற்றும் கள ஆய்வின் போது)
  2. அத்துமீறிய கட்டடங்கள் பற்றிய அறிக்கை இடல் தொடர்பான தகவல்கள்

தொலைபேசியின் ஊடாக            – முறைப்பாட்டு புத்தகத்தில்

கடிதங்கள் / மனுக்களின் ஊடாக – நாளாந்தம் கடித குறிப்புக்கள்

இடப்படும் ஆவணத்தில்

கள ஆய்வு    – மெமோ பத்திரம்

சகலவற்றையும் குறிப்பெடுப்பதோடு உரிய தொடர் இலக்கம்

ஒன்றினை  வழங்குதல் வேண்டும்.

  1. தலைவர் ​/ செயலாளரிடம் சமர்ப்பித்து அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல்.
  2. தொழில்நுட்ப உத்தியோகத்தரினால் கள ஆய்வு நடாத்தப்பட்டு அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்ளல். (இணைப்பு 01)
  3. அவ் அறிக்கைக்கு திகதி முத்திரையினை இடல்.
  4. அவ் அறிக்கையினை அத்துமீறிய கட்டட நிர்மானங்கள் தொடர்பான ஆவணத்தில் உள்ளடக்கல்
  5. அறிக்கையினை தலைவர் ​/ செயலாளரிடம் சமர்ப்பித்து கட்டளையினைப் பெற்றுக் கொள்ளல்.
  6. வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் 12 (1) ஆம் பிரிவின் பிரகாரம் அறிவித்தல் ஒன்றினை வெளியிடல். (தலைவரினால் கையொப்பம் இடல் வேண்டும்) (இணைப்பு 02)

 

  1. மேல்காணும் 08 ஆம் பந்திகளில் குறிப்பிப்பட்ட அறிவித்தல்களின் பிரகாரம் கட்டுமான பணியினைச் செய்பவர் அல்லது அவரது பிரதிநிதி அங்கீகரிக்கப்பட்ட வரைப்பட திட்டத்தினைச் சமர்ப்பித்தல்.

(அ) வரைப்பட திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட காலவரையறையானது காலாவதியாகி உள்ளதா என் பரிசீலனைச் செய்தல் அல்லது செல்லுபடியாகும் காலவரையறையானது காலாவதியாகி இருப்பின், அக் காலத்தை நீடிப்பதற்கான அறிவுரைகளை வழங்குதல். (அங்கீகரிக்கப்பட்ட தினத்திலிருந்து 04 வருடங்களுக்கு மேற்பட்டு இருப்பின் புதிய விண்ணப்பப் படிவத்தின் ஊடாக விண்ணப்பிப்பதற்கு அறிவுரையினை வழங்குதல் வேண்டும்.)

 

(ஆ) அங்கீரிக்கப்பட்ட வரைப்பட திட்டத்தின் பிரகாரம் கட்டுமான பணி நடைப்பெறுகின்றதா என பரிசீலனைச் செய்தல்.

 

(இ) அங்கீகரிக்கப்பட்ட வரைப்பட திட்டத்தின் பிரகாரம் கட்டடம் நிர்மானிக்கப்பட வில்லை எனில் கட்டுமானப் பணியினை இடைநிறுத்துமாறு அறிவித்தல் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தினை 14  நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்.

  1. மேல்காணும் 8 ஆம் பந்திகளில் குறிப்பிப்பட்ட அறிவித்தல்களின் பிரகாரம் கட்டுமான பணியினைச் செய்பவர் அல்லது அவரது பிரதிநிதியினால் அங்கீகரிக்கப்பட்ட வரைப்பட திட்டத்தினைச் சமர்ப்பிக்கபடா விடின்,

(அ) தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமானப் பணியினை இடைநிறுத்துமாறு அறிவித்தல்.

(ஆ) கட்டட அனுமதி விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிப்பதோடு வரைப்பட திட்டத்தினை 14 நாட்களுக்குள் சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தல்.

  • மேல்காணும் 8 ஆம் பந்திகளில் குறிப்பிப்பட்ட அறிவித்தல்களின் பிரகாரம் கட்டுமான பணியினைச் செய்பவர் அல்லது அவரது பிரதிநிதி முன்வராவிடின் அல்லது குறித்துரைக்கப்படுகின்ற காலவரையறையில் கட்டட அனுமதி விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பித்து வரைப்பட திட்டத்தின் அங்கீகாரத்தினைப் பெறாத சந்தர்ப்பத்தின் போது,

 

(அ) தற்போது நடைப்பெற்று கொண்டிருக்கும் கட்டுமானம் அல்லது நிறைவு செய்துள்ள கட்டுமானத்தினை உடைத்து அகற்றுமாறு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் 12 (2) ஆம் பிரிவின் பிரகாரம் அறிவித்தலினை பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

 

(ஆ) மேல்காணும் (அ) பந்திகளில் குறிப்பிப்பட்ட காலவரையறையில் உடைத்து அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படா விடத்து உடைத்து அகற்றுவதற்காக நீதிமன்றத்தின் கட்டளையினைப் பெற்றுப் கொள்ளல்.

  1. நீதிமன்ற கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
தெருவிளக்குகள் பராமரித்தல் தொடர்பான சேவைகள்

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 108 ஆம் பிரிவின் பிரகாரம் “ பொது பயன்பாட்டு சேவைகள் ”  மற்றும் தெருவிளக்குகள் பராமரித்தல் தொடர்பான சேவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச சபையினால் சுயாதீன அமைப்புடன் அல்லது யாதேனும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் அல்லது யாதேனும் நபருடன் ஒன்றிணைந்து அப் பிரதேசத்தில் வதிவிடமுடைய அல்லது அப்பிரதேசத்திற்கு வதிவிடத்திற்காக செல்கின்ற நபர்களின் நலன் கருதி கீழ் குறிப்பிடப்பட்ட பொது பயன்பாட்டுச் சேவைகளில் யாதேனும் சேவை ஒன்றினை நிறுவி பராமரிக்கப்பட்டவ வருகின்றது.

(அ) நீர் வழங்கல்கள்;

(ஆ) தெருக்கள், பொது இடங்கள் மற்றும் பொது கட்டடங்கள் மின் விளக்குகளினால் ஒளிரூட்டல்;

(இ) மின்சாரம் அல்லது மின்சாரம் வழங்குதல்;

(ஈ) சந்தைகள்;

(உ) விடுதிகள்;

(ஊ) பொது குளியல் இடங்கள் மற்றும் குளிப்பதற்கான இடங்கள்

(எ) மலசலகூடங்களுக்கான மலசலசலகூட பலகைகளை உற்பத்தி  செய்யப்பட்டு உற்பத்தி செலவின் அடிப்படையல் விற்றல்

(ஏ) ஸ்தாப்பித்தல், பராமரித்தல் அல்லது திட்மிடலுக்காக இவ் சட்டத்தின் யாதேனும் சில ஏற்பாடுகளிலிருந்து அல்லது எழுத்துமூல சட்ட ஆவணத்தின் கீழ் அதிகாரம் பெற்றுள்ள ஏனைய யாதேனுமொரு பொது சேவைகள்.

அதன் பிரகாரம் கீழ் குறிப்பிடப்பட்ட சேவைகளுக்கான முறைப்பாடுகள் / யோசனைகள் தொடர்பாக இவ் இணையத்தளத்தினுள் சென்று  முறைப்பாடுகள் மற்றும் யோசனைகள் பிரிவினை அணுகி தங்களது முறைப்பாடுகளை வழங்க முடியும்.

  • தெருவிளக்குகள் செயற்படாதது தொடர்பான முறைப்பாடுகள்
  • புதிய தெருவிளக்குகள் பொருத்துவது தொடர்பான முன்மொழிவுகள்

 

தெருவிளக்குகளை பழுதுப்பார்த்தல் – 2023

  • 2023/01/01 ஆந் திகதி முதல் 2023/12/31 ஆந் திகதி வரையில் பழுதுப்பார்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 137 ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில் பிரதேச சபையினால் பழுதுப்பார்க்கப்பட்ட மொத்த தெருவிளக்குகளின் எண்ணிக்கை 445 ஆகும்.

தெருவிளக்குகளை பழுதுப்பார்த்தல் – 2024

  • 2024/01/01 ஆந் திகதி முதல் 2024/06/10 ஆந் திகதி வரையில் பழுதுப்பார்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 100 ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டில் பிரதேச சபையினால் பழுதுப்பார்க்கப்பட்ட மொத்த தெருவிளக்குகளின் எண்ணிக்கை 202 ஆகும்.
திட்டமிடல் பிரிவு
  • கட்டட அனுமதி விண்ணப்பப் படிவங்களை அங்கீகரித்தல்
  • கட்டட அனுமதி விண்ணப்பப் படிவங்களை மீள் திருத்தியமைத்தல்
  • கட்டட அனுமதி பத்திரத்தின் காலத்தினை நீடித்தல்
  • குடியிருக்கைச் சான்றிதழினை வழங்குதல்
සංවර්ධන ව්‍යාපෘති ක්‍රියාත්මක සැලැස්ම

සංවර්ධන ව්‍යාපෘති

කිරුලගම උඩ පාර
1
2
ආටිස්මලේ මාර්ගය සංවර්ධනය
1
2
කිරිගල්පොත්ත නුග ගස අසළ මාර්ගය සංවර්ධනය කිරීම
1
2
ගොලහැන්වත්ත ගම මැද මාර්ගය සංවර්ධනය
1
2
තොටගමුව සව්සරණි මාවත සංවර්ධනය
1
2
3
දොරකුඔුර
2
දොරකුඔුර බහුකාර්ය මධ්‍යස්ථානය
නිකවෙල බී මාර්ගය
1
2
සමන්දාව රතනසාර මාවත
9aa0e77d-840c-43dd-8ca2-1c7f028ecce2.jfif
8e9165de-c5f4-449e-a432-fb6ff2369e53.jfif
සමර්සෙට් පාර්ක් මාර්ගය සංවර්ධනය
1
2